Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்ற உடற்கல்வி ஆசிரியர் பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் 10 முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இல்லாமல் தேர் முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வருடம் பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் என கூறி, இதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிகின்ற பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் நிலை 1 மற்றும் 2 ஆகிய விவரங்களை ஏப்ரல் மாதத்தின் முதல் வார இறுதிக்குள் நடக்கவுள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கான ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றிய விவரங்களையும், அதன்பின் 9 முதல் 10-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களையும், மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 வரை பணியாற்றுகின்ற உடற்கல்வி இயக்குனர்களின் விவரங்களையும் மற்றும் மாணவர்கள் குறித்த எண்ணிக்கை விவரத்தையும், கல்வித்துறை அதிகாரிகள் கல்வி மாவட்ட அளவில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |