Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டைலரிங், பியூட்டிஷியன், பொது இயந்திரவியல், மின்சாதனங்கள் பழுது பார்த்தல் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொழிற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தொழிற் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.இதனால் தொழில் பாடப்பிரிவுகளை மூடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இதனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை பள்ளிக்கல்வித்துறை மூடி உள்ளது பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

Categories

Tech |