Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில்…. இவ்வளவு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்?… வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியில் அரசு சார்பாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக தனியார் பள்ளிகள் மீது இருந்த மோகம் மற்றும் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது குறைந்தது. அதாவது அரசு பள்ளிகளில் பயின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது 83 ஆயிரம் வரை குறைந்தது. இதன் காரணமாக அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைந்தது. இந்த நிலையில் சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணம் கொடுக்க முடியாததால் அங்கு படித்த மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது 2020-2021 கல்வியாண்டில் 1 லட்சத்தை கடந்தது. கடந்த 2010-2011 கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்து320 ஆக இருந்தது. இந்த சூழ்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்த வருடம் ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இதனால் மாணவர்களினுடைய எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்களின் எண்ணிக்கையானது குறைவாக உள்ளது.

எனவே தேவையான ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சியானது திட்டமிட்டு இருந்தது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் தலைமையில் நடந்தது. அவற்றில் மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் தேவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் 900 ஆசிரியர்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம்செய்ய உள்ளதாகவும், இது குறித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |