தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதாவது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த விண்ணப்பம் இது முடிவு எடுக்கக் கூடாது. விண்ணப்பங்களை நேரடியாக மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் அனுமதிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி நிர்வாக குழுவுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அந்தக் குழு பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுறுத்தல்களின் படி விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானது மட்டுமே.கல்வி பெறும் உரிமை சட்டத்தின் வழிகாட்டுதல்களின் படி தகுதியானவர்களுக்கு மட்டுமே பணிநீய மனம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.