Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் நவம்பர் மாதம் வரை…. அரசு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் நவம்பர் மாதம் வரை மாணவர் சேர்க்கையை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வித பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி எல் கே ஜி, யுகேஜி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த பள்ளிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாமலும், பாதியில் படிப்பை விட்டு தவிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நவம்பர் மாதம் வரையிலும் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |