Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சில அடிப்படை வசதிகூட இல்லாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை எழுந்த போதிலும் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 2,391 அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கழிப்பறை இல்லாத பள்ளிகளின் பட்டியலை கல்வித் துறையிடம் சிஇஓ ஒப்படைத்தனர். மேலும் கழிப்பறை அமைக்க இட வசதி உள்ளதா என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |