Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு…. மாணவர் சேர்க்கை….வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் கொரோனா  பாதிப்பிற்கு  பிறகு, கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கின. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்தது. அதன்படி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தற்போது 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி, இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை மே மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான  அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை பற்றிய வினாக்கள் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

எனவே கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்  காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமானது போல், மாணவர் சேர்க்கையும் தாமதமாகவே நடத்தப்பட்டது. எனவே அதனைப் போல் இந்த ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறு தேர்வுகள் முடிவு பெற்ற பிறகு, மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்திற்காக பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாகவும்,  இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |