Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பள்ளி தொடர்பான 34 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் 7500 திறன் வகுப்புகளை 150 கோடி செலவில் உருவாக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் ஏழு கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

30 கோடி ரூபாய் செலவில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விளங்கும் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட நூறு பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் எனவும் இந்தப் பேரவையில் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் மாணவர்களின் உடல் நலன் காக்க அதற்குத் தேவையான சிறப்பு பயிற்சிகளும், மனநலம் காக்க விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் எனவும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இவற்றுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் இடங்களில் முதல் கட்டமாக இந்த ஆண்டு மட்டும் 9ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |