Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் மேலாண்மை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறுகட்டமைப்புக்கான பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.

அதன்பிறகு அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 23-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் ஏப்ரல் 30 மற்றும் 7-ம் தேதிகளில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஜுன் 4-வது வாரத்தில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ‌ இந்த கால அட்டவணையை பயன்படுத்தி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இந்த உறுப்பினர்களை சிறந்த முறையில் எவ்வித புகாருக்கும் இடமின்றி தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி தேர்வு செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |