டாட்டா குழுமத்தின் செயல் தலைவராக பணியாற்றி வரும் சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் படித்து வளர்ந்த இவர் கோவை & திருச்சியில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்பும், லக்னோவில் வேளாண்மை படிப்பையும் முடித்துள்ளார்.
1987-ஆம் ஆண்டில் டிசிஎஸ்-ல் ஒரு பயிற்சி ஊழியராக இணைந்த இவர் டாட்டா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பத்மபூஷன் வரை பெற்ற தகுதிபெற்ற தரமான தமிழன் சந்திரசேகரன் ஆவார்.