Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு சில அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின் கடந்த மாதம் முதல் 1 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதியும் மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க பாடத்திட்டம் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் கோடை விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில் பள்ளி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு குடிநீர் வசதி கழிப்பிட போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட் அணிய கூடாது. ஆசிரியர்கள் கழுத்தில் செயின் அணிந்து இருந்தால் அதை வெளியே தெரியாத வகையில் அணிய வேண்டும் எனவும் மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி தலைமை ஆசிரியர் தலைமை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |