தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கடந்த 2021 ஆம் ஆண்டும் அரசு தடை செய்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஈட்டிய விடுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது ஈட்டிய விடுப்பு என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் விடுப்பை எடுக்கவில்லை என்றால் இதனை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்கு உரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இல்லாமல் வழங்கப்படும்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.இதனை அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஈட்டிய விடுப்பு கணக்கிடும்போது தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி கணக்கிடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விரைவில் ஈட்டிய விடுப்பிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.