Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் ஆர்வமூட்டும் வகையில் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் பயிற்சிகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் கடந்த ஆண்டு 12 மாவட்டங்களில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி வகுப்புகள் இந்த வருடம் 18 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மாவட்ட வாரியாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் முற்றிலும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளுமாறும், பின் அவர்கள் மூலமாக இதர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இணைய வழியில் முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஆந்திராவில் குப்பம் வளாகத்தில் நடைபெற இருப்பதாகவும், அதற்கு ஏற்றார் போல் உரிய ஆசிரியர்களை பணி விடுப்பு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 -10ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தும் 310 ஆசிரியர்களில் 187 ஆசிரியர்களுக்கு ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக இந்த பயிற்சி வகுப்புகள் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |