தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Categories