தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களே பொதுத்தேர்வுக்கு உள்ள நிலையில் பாடப் பகுதிகளை எளிமையான முறையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் வகையில் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.