Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. எனினும் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. தற்போது  கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொதுப் பணியிடம் மாறுதல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியது.

அந்த வகையில் ஜனவரி 24 முதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஜனவரி 26ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடம் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். அதன்பின் முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஒத்திவைக்கப்பட்ட பணி தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு அவர்களுக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |