Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களே…. NTSE தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது மாதம் தோறும் ரூ.1250 வீதம் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளநிலை மற்றும் முதுகலை படிப் பிற்கு ஒவ்வொரு மாதமும் 2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான NTSE தேர்வு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் நவம்பர் 8 முதல் நவம்பர் 13ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை 50 ரூபாயை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் தேதி நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |