Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு பள்ளி கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் கற்றல்திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் ஆங்கிலத்தில் வகுப்புகளை எடுக்க பள்ளிக்கல்வி துறை தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை தற்போது முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வளர்ப்போம் ஆசிரியர்களை மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அரை மணி நேரம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஆசிரியர்களை அடையாளம் காண கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |