தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டுப்புற கலைஞர்களுக்கு மட்டும் அரசு பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகை உடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் எடுத்துச் சொல்லும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் அரசு பேருந்துகளில் தொழில்முறையாக பயணம் செய்யும்போது 50 சதவீத பயண கட்டண சலுகை பெறலாம்.
அவர்கள் எடுத்துச் செல்லும் இசைக் கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயணத்தை மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை,விழுப்புரம் மற்றும் சேலம் பேருந்துகளில் அனுமதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பு நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.