Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில்…. 10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால்… போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை….!!!

மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கான தயக்கம் இருந்து கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் 10, 20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாநகர பேருந்துகளில் டிக்கெட்டிற்காக மக்கள் வழங்கும் 10, 20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து இந்த அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |