புதுச்சேரி சாரம் பெட்ரோல் பங்கிற்கு பகல் நேரத்தில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி., மாறன் கூறியுள்ளார். புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக இருப்பதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக்கொள்ள உத்தரவிடப்படுகிறது.
புதுச்சேரியில் சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத் பெட்ரோல் பங்கில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரிசை கட்டியதால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., மாறன் தமிழக அரசு போக்குவரத்து கழக உப்பளம் டெப்போ நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு பஸ்கள் பெட்ரோல் பங்கிற்கு வரக்கூடாது. மேலும் இரவு 8 மணிக்கு பின் டீசல் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.