தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பேருந்துகள் இயங்காது.
இந்நிலையில் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஞாயிற்றுக்கிழமை வாரம் விடுப்பு மாற்றப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்துகள் இயக்கம் பராமரிப்பு பணியில் 1.10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு விடுப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொழில்நுட்ப பணியாளர்கள் தவிர்த்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வார விடுமுறை ஞாயிறு கிழமையாக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.