தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒப்பந்தக்காரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு சார்ந்த அனைத்து கட்டிட அமைப்புகளும், பொதுப்பணித்துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனை கட்டிடம், மின் வளாகம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை சிறந்த காலத்திற்கு மேற்கொள்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலருக்கு பணிகள் வழங்கப்படும்.
இத்தகைய ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஒப்பந்த பதிவை ஒரு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என்று அறிவித்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு ஒப்பந்தக்காரர்கள் 10 கோடிக்கும் மேலான ஒப்பந்த பதிவுகளை மேற்கொள்ளலாம்.
இரண்டாம் வகுப்பு ஒப்பந்தக்காரர்கள் 5 கோடி முதல் 10 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். மூன்றாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் 2 கோடி முதல் 5 கோடி வரையும், நான்காவது ஒப்பந்ததாரர்கள் 50 லட்சம் முதல் இரண்டு கோடிவரை தங்களது ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.