Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது….. பாமக நிறுவனர் கோரிக்கை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு  போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் உலக வங்கியுடன் தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தம் தான். தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு உலக வங்கியுடன் நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம், சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம் என்ற தலைப்புகளில் சில ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, நடைபாதை கட்டமைப்புகள் மற்றும் சென்னையில் உள்ள போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக 12,000 கோடி ரூபாயை உலக வங்கியானது கடனாக கொடுக்க இருக்கிறது.

இந்த நிதியில் இருந்து வாங்கப்படும் 1000 பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் நியமிக்கும். இவர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்தும். இந்த திட்டத்தின் படி நடப்பாண்டில்  500 பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு வருகிற 2024-ஆம் ஆண்டு 500 பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இந்த பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதால் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த கட்டண உயர்வு காரணமாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படலாம்.

இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். இந்நிலையில்  சென்னையில் இயக்கப்படும் பேருந்துகள் அடுத்து தமிழகம் முழுவதும் நீடிக்கப்படும். உலகின் சிறப்பான போக்குவரத்து கட்டமைப்பை கொண்டிருக்கும் நகரங்களில் சென்னை மாநகராட்சியும் ஒன்று. கடந்த 50 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைப்பதால் தமிழக அரசுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள்  ஏற்படுவதோடு ஏழை எளிய மக்களும் பாதிப்புக்கு உள்ளார்கள். எனவே தமிழக அரசு தனியாரிடம் போக்குவரத்து கழகத்தை ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |