தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகின்றது. இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. முன்களப்பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து தற்போது ஒரு முக்கியத்துவமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் பணியாளர்களின் பணி அளப்பரியது, அவர்கள் எப்போதுமே போற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
செங்கல்பட்டு பொது மருத்துவமனையின் டீன் சுகுமாறன், மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி உட்பட 28 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.