Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்கள்…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் பல்வேறு விபத்துக்கள் குறைகிறது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்வாரியத்தில் 45 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அதனால் களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமையில் இருப்பதாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் கூறியதாவது, தமிழக மின் வாரியத்தில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 பணியாளர்கள் வரை பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது 88 ஆயிரத்து 419 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து கள உதவியாளர் பணியிடத்தில் 23 ஆயிரம் காலிப் பணியிடங்களும், கம்பியாளர் பணியிடத்தில் 8 ஆயிரமும் காலிப்பணியிடங்களும், கணக்கீட்டாளர் பணியிடத்தில் 3400 காலிப்பணியிடங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களின் பணிச்சுமையை தவிர்க்கும் அடிப்படையில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அத்துடன் தினக்கூலி பணியாளர்களுக்கு தினசரி 380 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மின்வாரியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ள ஊதியம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |