கொரோனா பேரிடர் காலத்தில் பலரும், பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்டெடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசாங்கமும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீட்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கு கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என சான்று பெற வேண்டும். பரிசோதனைக்கு உரிய கட்டணத்தை அந்தந்த தொழில் நிறுவனங்களில் செலுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.