தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என தமிழ் மீது மிகுந்த பற்று உடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்தித் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மிளகாய்த்தூள், உப்பு உள்ளிட்ட பொருள்களின் அட்டையில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழ் வார்த்தையே இல்லை. இது எந்த வகையில் நியாயம்?… என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.