மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்காக அறிவிப்பை தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டிருக்கிறார்.
இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் பணிபுரியும் உலமாக்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக மானிய விலையில் இருசக்கர வாகனத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தர்மபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125சிசி மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998,ன் படி பதிவு செய்திருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தில் மொத்த விலையில் 50% அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000 இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும் எனவே இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.