Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு விருதுகள்: இவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் கலை துறையில் இருப்பவர்களை கருத்தில் கொண்டு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கலைஞர்கள் ஊக்கம் பெற்று அடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது  2021- 2022ஆம் வருடத்துக்கு கலை விருதுகள், கலை பண்பாட்டு துறையின் கீழ் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் 1 அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கபட இருக்கிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல் பாவை கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி யாட்டம், ஆழியாட்டம், கை சிலம்பாட்டம் என்று அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதை பெறுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அப்போது விண்ணப்பத்துடன் கலைஞரின் வயது சான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்களுடன் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதானது 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 36-50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் மணி, 51 முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி என்ற நிலையில் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |