Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….. கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….. அப்படி என்ன சொன்னாங்க….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி ஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறினார்.

இந்த அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது திருவாரூரில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறிவிட்டு தற்போது அதனை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |