Categories
மாநில செய்திகள்

தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்களின் ஆண்டு வருமானமானது 72,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்திருந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் இலவச வீட்டுமனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 72,000 திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மேலும் பல பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |