தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி , பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டும் மதிப்பீடு தேர்வாக அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமான முறையில் கொண்டுவந்துள்ளது. இதனால் தமிழக இளைஞர்களுக்கு அதிக அளவில் பணியிடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்மொழி தகுதி தேர்வில் 100 மதிப்பெண் கொண்டதாக உள்ளது.
இந்தத் தேர்வில் தமிழில் குறைந்தது 40% மதிப்பெண் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தமிழ் மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் தமிழ் மொழி தெரியாத வெளிமாநிலத்தவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டார்கள். இதனை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.