சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பாலூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி துறை சார்பில் 7 ஆராய்ச்சி கட்டுரைகளில் ஏற்கனவே உலகப்புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் குணமடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இனிமேல் மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் இல்லாமல் நிரந்தர அடிப்படையில் தான் வேலைகள் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.