Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏராளமானோர் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காமல் இருந்தனர். இதனால் கடந்த வருடம் வேலைவாய்ப்பு புதுப்பிக்க அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் 2014, 2015, 2016, 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே சிறப்பு புதுப்பித்தல் நிலையின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாகவும், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவும் அனைவரும் தங்களது பதிவுகளை 2022 மார்ச் 1-ஆம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |