தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து பாஜகவினர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்த விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு ஆலயங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு கொரோனாவை காரணம் காட்டி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. இதைபோல் இந்துக்களின் அனைத்து விழாக்களையும் கொண்டாடுவதற்கு தடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இவர்கள் இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும் இப்பொழுது தடுத்து வருகின்றனர். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, “எங்களது உரிமையைப் பறிப்பதற்கு சமம், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதாகும். ஆகவே தமிழக அரசானது வெள்ளிக்கிழமை உள்ளிட்ட மூன்று நாட்களிலும் கோவில்களை திறந்து, அனைத்து நாட்களிலும் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் ” என்று கூறினார்.