நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை முன்னிட்டு நடிகர் கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் – கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், “தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். வருகிற செப்டம்பர் 15-ம் தேதி அன்று ரெட் ஜெயன்ட் வெளியிடும் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.