வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.