பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பன்றிவாய்க்கால் பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் வழிபாட்டுத்தளம் அமைக்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் நாஞ்சில் ராஜா, அகில பாரத இந்து மகா சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், துணைத்தலைவர் தேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.