கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கம் அல்ல மாநில அரசிற்கு அழுத்தம் கொடுப்பது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்காக தான். கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்கை எடுத்தது முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் தவறுகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. அதனால் கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தங்கள் உயிரை பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டு இருக்கின்றனர் அவர்களுக்கு நன்றி. கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை பாஜக எந்த மதத்திற்கும் எதிரான காட்சி அல்ல. மேலும் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. குற்றவாளிகளை ஒரு மதத்தை சேர்ந்தவர் எனக் கூறவில்லை தவறு என இஸ்லாமிய குருமார்களை தெரிவிக்கின்றனர் பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்கடத்தில் கார் வெடித்த இடத்தில் கிடந்த பால்ரஸ் குண்டு, ஆணிகளை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளார். அதன் பின் கோவில் அருகே கிடந்ததாக மக்கள் எடுத்துக் கொடுத்த பாஸ்பரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்துள்ளார்.