Categories
அரசியல்

“தமிழக அரசை முடக்க வாய்ப்பு…??” எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பரபரப்பு தகவல்…!!

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கே.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது எனக் கூறியுள்ளார். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பின்னர் சித்தப்பா என பெயர் வைக்கலாம் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு அவருடைய அறியாமையை காட்டுகிறது என கூறியுள்ளார். சட்டமன்றத்தை முடக்கினால் தான் பாஜகவுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி வைப்போம் என்ற அதிமுகவின் ஆசையை எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு சூசகமாக கூறுகிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Categories

Tech |