Categories
மாநில செய்திகள்

“தமிழக ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு”… வெளியான அறிவிப்பு…!!!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் சரியாக நடத்தப்படவில்லை. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான காலி பணியிடங்களும் நிரப்பப் படாமல் இருந்தது. மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு போன்றவை நடத்தப்படவில்லை. கடந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் போன்றவை நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் மழை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியது காரணமாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டது.

அத்துடன் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனையடுத்து தற்போது இதுபற்றிய அறிவிப்பை தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டிருக்கிறார். அவர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 ஆம் தேதி அன்று நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இருப்பதால் எஸ்எம்எஸ் மூலமாக seniority list அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் வெளியிடப்பட்ட பிறகு எந்த ஒரு திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது எனவும் இதில் ஏற்படும் பின்விளைவுகளுக்கு மாவட்ட முதன்மை அலுவலர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |