வருகிற 20-ஆம் தேதி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 20ஆம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் மற்றும் குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி ஏற்பட்ட குழுவை பள்ளி மேலாண்மை குழு வாங்கும் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அரசாணை நிலை எண் 42 பள்ளிக்கல்வித்துறை (SSA1)06.03.2019 பள்ளி மேலாண்மை குழுவினர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது மிகவும் அவசியமாகும். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள மேலாண்மை குழுவினை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பள்ளி மேலாண்மை குழு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
அதனால் தலைமை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் தினத்தன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமையும் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளதால் 19.03.2022 சனிக்கிழமை அன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.