Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு…. அரசு கிடுக்குப்பிடி….!!!!

பள்ளி வாகனங்களை பராமரிப்பதற்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆழ்வார்நகரில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்திற்கான காரணத்தை பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேப்போன்று பள்ளி வாகனங்களை பராமரிக்கும் முறைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்தில் பழுதடைந்த 10,000 பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 5 வருடத்தில் 16 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்ட தொடக்கமாக இந்த ஆண்டு 1300 கோடி செலவில் கழிப்பறை, ஆய்வக வசதியுடன் கூடிய பள்ளிகள் கட்டப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது பள்ளி வாகனங்களில் 1 உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் இருந்து மாணவர்களை இறக்கிவிடும் போது 2 ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகம் முறையாக பின்பற்றியிருந்தால் 2-ம் வகுப்பு மாணவனை காப்பாற்றி இருக்கலாம். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சில மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |