தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் வாக்குறுதில் அறிவித்த முக்கிய திட்டங்களை அரசு அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதில் முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை ஒன்று ஆகும். பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பின் பொய்யா மொழி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி மாணவர்களில் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி பூர்த்தி செய்யும் வகையில் எண்ணும் எழுத்து திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதனை போல 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் விரைவில் அமலாக உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் நலன் கருதி “ஆசிரியர்களின் மனசு” என்ற திட்டம் தொடங்கப்படுவது குறித்து புதுக்கோட்டையில் நடந்த ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். தங்களின் கோரிக்கைகளை என்ற மெயில் ஐடியில் ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.