Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்கள் பணி நியமனம்…. இப்படியொரு அதிரடி உத்தரவு…. ஆசிரியர்களுக்கு ஷாக்…!!!

கல்வி ஆண்டின் மத்தியில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் மத்தியில் பணி நிறைவு பெறுவார்கள். இந்நிலையில் பணிநிறைவு பெறுபவர்களுக்கு மறு நியமனம் கோரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதனை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குறிப்பிட்ட கல்வி ஆண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்டப் பாடத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். எனவே பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை தேவை இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உபரி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் நியமன உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அதேசமயம் கல்வி ஆண்டில் மத்தியில் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியாது என்பதை சுட்டிக் காட்டினார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் மறு நியமனம் கோர ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும், நீதிபதி உத்தரவு பிறப்பித்தா.ர் இதனால் ஆசிரியர்கள் தரப்பில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

Categories

Tech |