Categories
மாநில செய்திகள்

தமிழக ஆண்களை ஓவர் டேக் செய்த பெண்கள்….. வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கை….. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, பெயர் திருத்தம் போன்ற பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை சேர்க்கும் பணிகளும் நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலும் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பான தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 6,18,26,182 வாக்காளர்கள் இருக்கும் நிலையில், ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும் இருக்கிறார்கள். அதன் பிறகு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களில் 7,758 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அதிகபட்சமாக சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்களும், துறைமுகம் பகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் இருக்கிறார்கள். இதனையடுத்து தமிழகத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிக அளவில் இருக்கிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் சரிபார்ப்பு தொடர்பான பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் வருகிற 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |