Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம்…. திடீர் ரத்து…!! காரணம் என்ன..?

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் கே.என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் கே.என். ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து ஆளுநர் டெல்லி செல்வதால் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் திடீரென ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகை சார்பில் ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..

Categories

Tech |