விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “பல்வேறு நிகழ்ச்சிகள் இரட்டைமலை ஸ்ரீநிவாசன் நினைவாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்களிடம் அவரது வாழ்க்கை நடைமுறைகளை பற்றி நாம் எடுத்துரைக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இத்தேர்வால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அனிதா முதல் சௌந்தர்யா என நீண்டு கொண்டே வருகிறது.
இதனால் பல மாணவர்களை நாம் இழந்துள்ளோம். இந்நிலையில் நீட் தேர்வை எழுதிய செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அனுசியா மன உளைச்சலில் தீக்குளித்தார். தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் அவருக்கு 40% காயத்துடன் காயம் ஏற்பட்டது. மேலும் இவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். குடியரசுத்தலைவர் சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தின் கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை கொண்டு வரும் 20-ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
தற்போது ஆளுநராக உள்ள ரவி அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் அவர் நாகலாந்தில் ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர்கள் மீது பெரிய போராட்டம் நடத்திய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதனால் அவரை தமிழகத்தில் பதவியில் நியமிக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தோம். ஆனால் அதனை மத்திய அரசு பொருட்டாக எண்ணவில்லை என்று கூறியுள்ளார்.