ஜோலார்பேட்டை நகராட்சியில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் வண்டலூரில் முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி ஊராட்சியில் 500 மரக்கன்றுகளை நட்டு ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர மன்ற தலைவர் காவியா விக்டர் முன்னிலை வகிக்க ஆணையாளர் பழனி வரவேற்றார். பின் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.